உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவை துவக்கம்

தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவை துவக்கம்

தேனி: மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பெரியகுளம், போடி தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவைகள் நேற்று (ஜன., 5) முதல் துவங்கியுள்ளது.தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் பரமசிவம் கூறியிருப்பதாவது: இரு தலைமை தபால் நிலையங்களில் இச்சேவை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படுகிறது.பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு இச்சேவை தபால் அலுலகத்தில் துவக்கி உள்ளோம். இதனால் பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்வோருக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகும். ஆதாரில் பிழைத் திருத்தம், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். பிறந்த தேதி திருத்தம் ரூ.50, புதுப்பித்தல் பணிக்கு ரூ.100 வசூலிக்கப்படும். இச்சேவையை பொது மக்கள் பயன்படுததிக்கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி