உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு ஆதார் சிறப்பு முகாம் துவக்கம்

மாணவர்களுக்கு ஆதார் சிறப்பு முகாம் துவக்கம்

தேனி : தேனி அல்லிநகரம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் சிறப்பு முகாம் துவங்கியது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி துவக்கி வைத்தார்.உதவி திட்ட அலுவலர்கள் சேதுராமன், மோகன் முன்னிலை வகித்தனர். ஆதார் பதிவுப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜ், கஜேந்திரன், எல்காட்' ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமையில் 60 மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டு, ஆதார் போட்டோ எடுக்கப்பட்டது. உடனடியாக ஆதார் பதிவு காப்பி வழங்கப்பட்டது. 30 நாட்களில் ஒரிஜினல் நகல்கள் கிடைக்கும் என்றனர். விரைவில் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 8 வட்டாரங்களிலும் சிறப்பு ஆதார் பதிவு முகாம்கள் நடத்தப்படும். அதில் பங்கேற்று மாணவர்கள் பயனடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை