| ADDED : நவ 15, 2025 05:21 AM
தேனி: குண்டர் தடுப்பு சட்டங்களில் கைது செய்யப்படுபவர்களின் விபரங்களை 30 நாட்களுக்குள் இன்ஸ்பெக்டர்கள் சமர்ப்பித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. மாவட்டத்தில் தொடர் திருட்டு, போக்சோ, கொலை குற்றவாளிகள் என 64 பேர் குண்டர் சட்டத்தில் எஸ்.பி., சினேகாபிரியா பரிந்துரையில் கலெக்டர் கைது செய்ய உத்தரவிட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்தற்கான ஆணைகள் வழங்கி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் எஸ்.பி.,யால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் விபரங்களை இன்ஸ்பெக்டர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்க 30 நாட்களுக்கு மேல் காலதாமதம் செய்வதால் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு அரசின் ஒப்புதலுக்கு செல்லும் காலதாமதம் குறித்து அதிகாரிகளை அரசு கண்டிக்கிறது. இதனால் எஸ்.பி.,யால் பரிந்துரைக்கப்படும் குண்டர் சட்ட கைதிகளின் விபரங்களை நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்களுக்கு முன்பே வழங்க இன்ஸ்பெக்டர்கள் முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.