மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து மேலாண்மை விவசாயிகளுக்கு பயிற்சி
06-Sep-2025
தேவதானப்பட்டி:பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலத்தில் மத்திய அரசின் திட்டமான 'கிஷான் சங்கோஸ்தி' வேளாண் கருத்தரங்கு நடந்தது. மதுரை பாக்ட் உரநிறுவன மண்டல மேலாளர் சிவச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் திலகர், தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர் மணிகண்ட பிரசன்னா முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர் சதீஷ், விஞ்ஞானிகள் செல்வ முகிலன், செல்வவிநாயகம் மற்றும் தென்னை, வாழை, நெல், கரும்பு, வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். காணொலி வாயிலாக நிலங்களில் பயிர் விளைச்சலுக்கு மண் பரிசோதனை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் மேலாண்மை குறித்து காணொலி வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. 'தாய் பூமியின் மறுசீரமைப்பு' விழிப்புணர்வு, ஊட்டச்சத்து மற்றும் மேம்படுத்தலுக்கான பிரதமமந்திரியின் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.--
06-Sep-2025