மேலும் செய்திகள்
நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு
1 minutes ago
மாணவர்களுக்கு கல்வி பரிசு வழங்கும் விழா
1 minutes ago
போலீஸ் செய்தி
2 minutes ago
சர்வதேச காபி தின விழிப்புணர்வு ஊர்வலம்
2 minutes ago
கூடலுார் : கூடலுார் ஈஸ்வரன் கோயிலை சீரமைக்க அனைத்து சமுதாயத்தினரின் ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது.கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் 17ம் நுாற்றாண்டைச் சேர்த்த வரலாற்று சிறப்புமிக்க ஈஸ்வரன் கோயில் உள்ளது. தொடர்ந்து பராமரிக்கப்படாததால் கோயில் முன் மண்டபம், கோபுர பகுதி சேதமடைந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இருந்தபோதிலும் ஒவ்வொரு வாரமும் பக்தர்கள் வார வழிபாட்டுக் குழு சார்பில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். கோயிலை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் ஈஸ்வரன் கோயிலை சீரமைப்பது தொடர்பாக வார வழிபாட்டு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட சமுதாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிரசன்னம் பார்த்ததன் அடிப்படையில் சேதமடைந்த கோயிலை சீரமைப்பது, இதன் வடக்குப் பக்கம் புதிதாக கோயில் கட்டுமான பணியை துவக்குவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும், வார வழிபாட்டு குழுவினரும் இணைந்து கோயில் கட்ட வேண்டும், அதற்காக கமிட்டி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கோயிலை திருக்கோயில் பட்டியலில் சேர்த்து கட்டுமான பணிகளுக்கான நிதியை அரசிடம் இருந்து பெற வேண்டும் என முன்வைக்கப்பட்டது.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago
2 minutes ago