உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேனி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா, தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் நடந்தது. 48 இடங்களில் நடந்த இப்போட்டிகளில் தமிழகத்தில் இருந்து 443 கல்லுாரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டி டிச.,19, 20ல் நடந்தது. தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியின் கணினி அறிவியல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் 5 அணிகளாக பிரிந்து ஆமதாபாத் குஜராத் தொழில்நுட்ப பல்கலை, நாக்பூர் ராய்சோனி பொறியியல் கல்லுாரி, அமராவதி பி.ஆர்., பாட்டில் பொறியியல் கல்லுாரி, கவுஹாத்தி ராயல்குளோபல் பல்கலைகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். கவுகாத்தியில் நடந்த போட்டியில் இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆலோசகர் மம்தாராணி மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தார். தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் நீர் மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் படைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான படைப்புகளை காட்சி படுத்தி இருந்தனர்.இவ்விரு படைப்புகளுக்கும் தலா ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. தேசிய அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாராட்டு விழா கல்லுாரி கூட்டரங்கில் நேற்று நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச் செயலாளர் நவீன்ராம், முதல்வர் மதளை சுந்தரம், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்று, மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ