உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ராணுவ வீரரின் மனைவி மாயம் 2 மாதம் கழித்து தந்தை புகார்

 ராணுவ வீரரின் மனைவி மாயம் 2 மாதம் கழித்து தந்தை புகார்

கம்பம்: கம்பம் அருகே ராணுவ வீரர் ஜெயராம் 30, மனைவி சிவந்தி 25, மாயமான நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து தெரிய வந்ததையடுத்து தந்தை கணேசன் 55, ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கம்பம் அருகே சுருளிப்பட்டி நேருஜி காலனியைச் சேர்ந்தவவர் கணேசன். இவரது மகள் சிவந்தி. இவருக்கும் வருஷநாடு ஜெயராமுக்கும் 30, ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஜெயராம் டில்லியில் ராணுவ வீரராக பணிபுரிகிறார். இத்தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிவந்தி கோபித்துக் கொண்டு சுருளிப்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். கடந்த அக்., 21 ல் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கணவரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சிவந்தி சென்றார். இரண்டு மாதங்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஒரிரு முறை அலைபேசியில் சிவந்தி பேசியதால் குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர். இந்நிலையில் சிவந்தி டில்லியில் அவரது கணவருடன் இல்லை என்பது கணேசனுக்கு தெரிந்தது. நேற்று முன்தினம் கணேசன், மகளை காணவில்லை என ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து சிவந்தியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி