மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்
08-Jul-2025
தேனி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தில் மாவட்டத்தில் 148 முகாம்கள் நடக்க உள்ளது. முகாமில் பங்கேற்கும் மக்களுக்கு மனுக்கள் எழுதி வழங்குவதை தவிர்க்க அரசு அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வீடுகள் தோறும் வழங்கும் பணி துவங்கியது. மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளில் 45,354 வீடுகளுக்கும், நகராட்சி, ஊராட்சி பகுதிக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. முகாமில் 13 அரசுத்துறைகள் சார்பில் 43 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளது.அரசு சார்பில் வழங்கப்படும் விண்ணப்பத்தில் ரேஷன்கார்டு எண், மனுதாரர் பெயர், அலைபேசி எண், துறை, கோரிக்கை எழுதும் வகையில் அச்சிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் ஒருபகுதி ஒப்புகை சீட்டாக உள்ளது.
08-Jul-2025