உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடையூறு செய்தவர்களை தட்டி கேட்டவர் மீது தாக்கு

இடையூறு செய்தவர்களை தட்டி கேட்டவர் மீது தாக்கு

கூடலுார் : குமுளி மலைப்பாதையில் தட்டிக் கேட்டவரை தாக்கிய 4 பேரை லோயர்கேம்ப் போலீசார் கைது செய்தனர். கூடலுார் எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த மலைச்சாமி 51, தனது மனைவியுடன் டூவீலரில் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் திரும்ப வரும்போது, குமுளி மலைப்பாதை மாதா கோயில் அருகேபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இவர் தட்டிக் கேட்டதால் காரில் இருந்த குமுளி ரோசாப்பூ கண்டத்தைச் சேர்ந்த கார்த்திக் 23, விக்னேஷ் 23, விஷ்ணு 29, சச்சின் 24, ஆகிய 4 பேர் இவரை தாக்கினர். காயமடைந்த மலைச்சாமி லோயர்கேம்ப் ஸ்டேஷனில் புகார் செய்ததைத் தொடர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை