குழந்தைகளுக்கு தொந்தரவு தடுக்க விழிப்புணர்வு முகாம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறத்தல்களை தடுப்பதற்கான பயிற்சி, விழிப்புணர்வு முகாம் மாவட்ட கருத்தாளர்களுக்கு நடந்தது. பயிற்சிக்கு நிறுவன தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணை முதல்வர் கீதாராணி முன்னிலை வகித்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் நல்ல மாயன், ஆசிரிய பயிற்றுநர் செல்லக்கண்ணு முதன்மை கருத்தாளர்களாக செயல்பட்டனர்.இப் பயிற்சியில் மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு 3 ஆசிரியர்கள் வீதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 24 ஆசிரியர்கள், பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், மற்றும் ஆசிரிய மாணவர்கள் பங்கேற்றனர்.தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் பற்றியும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போதுமணி குழந்தை பாதுகாப்பு அலகின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை பற்றி விளக்கினார்.