உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கம்பம்மெட்டில் அடிப்படை வசதி இன்றி ஐய்யப்ப பக்தர்கள் அவதி

 கம்பம்மெட்டில் அடிப்படை வசதி இன்றி ஐய்யப்ப பக்தர்கள் அவதி

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் ஐய்யப்ப பக்தர்கள் இளைப்பாறும் ஆரம்ப கால இடமான கம்பம்மெட்டில் அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் அவதியுற்று வருகின்றனர். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்குள் நுழைந்து சபரிமலை செல்கின்றனர். அதனால் ஆரம்ப காலம் முதல் கம்பம்மெட்டு ஐய்யப்ப பக்தர்கள் இளைப்பாறும் மற்றும் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்வதற்கு கேரள அரசு கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கிய போதும்,அத் திட்டம் கொரோனாவால் முடங்கியது. அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த 2022ல் அரசு முடிவு செய்தபோதும் நிதி எதுவும் ஒதுக்கவில்லை. கம்பம்மெட்டில் கருணாபுரம் சமுதாய கூடம் அருகே தனி நபர் ஒருவர் கொடுத்த 20 சென்ட் உள்பட அரை ஏக்கர் நிலம் அடிப்படை வசதிகளுக்காக கையகப்படுத்தப்பட்டது. தற்போது கம்பம்மெட்டில் உள்ள சமுதாய கூடத்தில் உள்ள கழிவறைகளை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் தங்கவும், வாகனங்கள் நிறுத்தவும் இடவசதி இன்றி பக்தர்கள் அவதியுற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை