உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண் கடத்தலை தடுக்க பா.ஜ., கோரிக்கை மனு

மண் கடத்தலை தடுக்க பா.ஜ., கோரிக்கை மனு

போடி: போடி அருகே ராசிங்காபுரம், கரட்டுப்பட்டி, மணியம்பட்டி, சூலப்புரம் பகுதியில் மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் அள்ளுவதை தடுக்கவும், சிலமலை பைபாஸ் ரோட்டின் இருபுறமும் மண் அள்ளி கடத்துவதால் பனை மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இதனை தடுக்க கோரி பா.ஜ., சார்பில் சின்னமனூர் மேற்கு மண்டல தலைவர் மகேந்திரன் தலைமையில் போடி தாசில்தார் சந்திரசேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். துணைத் தலைவர் மோகன்தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், மலைச்சாமி, போடி மேற்கு மண்டல தலைவர் ரவி, உத்தமபாளையம் கிழக்கு மண்டல தலைவர் அரசு, மேற்கு மண்டல பார்வையாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜீவா, மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை