உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  டிச., 21 முதல் 28 வரை தேனியில் புத்தக திருவிழா

 டிச., 21 முதல் 28 வரை தேனியில் புத்தக திருவிழா

தேனி: தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிச.,21 முதல், டிச., 28 வரை நடக்கிறது. இவ்விழா தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜகுமார், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், ஊரகவளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் அபிதா ஹனீப், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மேடை அமைப்பு, அரங்குகள், பேச்சாளர்கள் அழைப்பு, கலைநிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு, போக்குவரத்து சீரமைப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், மருத்துவமுகாம், கண்காட்சி அரங்கம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ