| ADDED : ஜன 04, 2024 06:22 AM
கூடலுார்: கூடலுாரில் முட்டைக்கோஸ் விளைச்சல் குறைவானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.கூடலுார் கழுதைமேடு, லோயர்கேம்ப், பளியன்குடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் முட்டைக்கோஸ் சாகுபடியாகிறது. மழை, தொடர் பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்தது. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.விவசாயி முத்தீஸ்வரன் கூறியதாவது: 2022 டிசம்பரில் 90 கிலோ எடையுள்ள ஒரு மூடை முட்டைக்கோஸ் விலை ரூ. 80 மட்டுமே இருந்தது. இதனால் விவசாயிகள் பலர் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே விட்டு விட்டனர். இந்நிலையில் தற்போது மதுரை மார்க்கெட்டில் மூடை ஒன்றுக்கு ரூ. 800 முதல் 900 வரை விலை உள்ளது. இதில் அறுவடை கூலி, வண்டி வாடகை, மருந்து தெளிப்பு ஆகியவற்றால் ஒரு மூடைக்கு ரூ.400க்கு மேல் செலவு உள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையானால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் இருந்த போதிலும் கடந்த ஆண்டை விட விலை அதிகரித்ததால் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில் மழை, தொடர் பனிப்பொழிவால் விளைச்சல் மிகக் குறைந்தது. விலை இருந்தும் விளைச்சல் குறைவானதால் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது., என்றார்.