உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ராணுவத்தில் சேர அழைப்பு

 ராணுவத்தில் சேர அழைப்பு

தேனி: இந்திய ராணுவப் பயிற்சி நிலையம் சார்பில் குளிர்கால ராணுவ விளையாட்டுகளின் ட்ரையல்ஸ் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நவ., 25 முதல் 29 வரை நடக்கிறது. இதில் தேர்வாகும் நபர்கள் இந்திய ராணுவத்தில் நேரடியாக நைப் சுபேதார், அவில்தார் பதவிநிலைகளில் சேர்ந்து பணியாற்றலாம். பங்கேற்பவர்கள் 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களாகவும், தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். தகுதி அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை