உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நீதிமன்றத்தில் ஆவணங்களை திருடிய இருவர் மீது வழக்கு

 நீதிமன்றத்தில் ஆவணங்களை திருடிய இருவர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் விரைவு நீதிமன்றத்தில் நில வழக்கு சம்பந்தமாக 18 ஆவணங்களை திருடிய வெங்கடேசன், அவருக்கு உதவிய நீதிமன்றம் எழுத்தர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெரியகுளம் விரைவு நீதிமன்றத்தில் 2017ல் சண்முகம், சிவசுப்பிரமணியன் நிலம் சம்பந்தமாக வழக்கு விசாரணை நடந்தது. அப்போது சண்முகம் வழக்கு சம்பந்தமாக 18 ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை அனுமதித்தும், சிவசுப்பிரமணியன் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சண்முகம் இறந்தவுடன், அவரது மகன் பழனிசாமி தந்தை கொடுத்த ஆவணங்களை கேட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் சிவசுப்பிரமணியன் மகன் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், அப்போதைய விரைவு நீதிமன்றம் பதிவுறை எழுத்தர் உதவியுடன் 18 ஆவணங்களையும் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தலைமை எழுத்தர் ரகுநாதன் புகாரில், தென்கரை போலீசார் வெங்கடேசன் மற்றும் பதிவுறை எழுத்தர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி