உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அடிதடி தகராறில் 5பேர் மீது வழக்கு

 அடிதடி தகராறில் 5பேர் மீது வழக்கு

போடி: போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சூர்யா 24. இவரது தாயார் முத்துலட்சுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து குமாரின் தாயார் குருவபிள்ளையிடம் மீன்களை கடனாக வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். மீன் விற்பனை செய்த பணத்தை கேட்டு முத்துக்குமார், மார்நாடு, சுப்பிரமணி, ஜெகதீஷ் ஆகிய நான்கு பேரும் சூர்யாவை தகாத வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். இது போல சூர்யாவும் சுப்பிரமணியை தகாத வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளார். சூர்யா புகாரில் சுப்பிரமணி, முத்துக் குமார் உட்பட நான்கு பேர் மீதும், சுப்பிரமணி புகாரில் சூர்யா மீதும் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ