உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அடகு கடை போலி ரசீது வழங்கி ரூ.3.30 லட்சம் மோசடி; நிதி நிறுவன மேலாளரை ஏமாற்றிய பெண் மீது வழக்கு

 அடகு கடை போலி ரசீது வழங்கி ரூ.3.30 லட்சம் மோசடி; நிதி நிறுவன மேலாளரை ஏமாற்றிய பெண் மீது வழக்கு

பெரியகுளம்: தேனியில் உள்ள அடகு கடையில் நகை வைத்துள்ளதாக கூறி போலியான ரசீதை காண்பித்து, தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.30 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிந்த தென்கரை போலீசார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். வத்தலக்குண்டு பாரதியார் தெரு ராஜசேகர் 40. வடுகபட்டி தனியார் நிதி நிறுவன கிளை மேலாளர். தேனி அரண்மனைப்புதுாரைச் சேர்ந்த முருகன் மனைவி செந்தாமரை 45. இவர் கிளை மேலாளரிடம், 'தான் தேனியில் அமைந்துள்ள அடகு கடையில் 48.150 கிராம் தங்க நகையை ரூ.3.12 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளதாகவும், அந்த நகைகளை அதிகமான பணத்திற்கு மறு அடகு வைத்து, பணத்தை தருமாறும், அடமானத்திற்கான, 'அசல் ரசீது' என, போலியான ரசீதை கொடுத்துள்ளார். இதனை நம்பிய கிளை மேலாளர் ரூ.3.30 லட்சத்தை செந்தாமரையின் வங்கி கணக்கிற்கு தங்கநகை மறு அடகிற்கான கடன் தொகையாக அனுப்பினார். செந்தாமரை பணத்தை தேனி அடகுக் கடையில் செலுத்தாமல், வடுகபட்டி தனியார் நிதி நிறுவனத்தை ஏமாற்றி மோசடி செய்தார். இந்நிலையில் கிளை மேலாளர் தேனியில் உள்ள நகை அடகு கடையில் விசாரித்தார். அப்போது செந்தாமரை, தேனி நகை அடகு கடையில் எவ்வித நகையும் அடமானத்தில் வைக்கவில்லை என, தெரிந்தது. ராஜசேகர் புகாரில், தென்கரை போலீசார் செந்தாமரை மீது மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை