உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரி கருத்தரங்கம்

கல்லுாரி கருத்தரங்கம்

போடி: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு போடி சி.பி.ஏ., கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கோபி வரவேற்றார். விழாவில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் பேசுகையில்,' அறிவியல் ஆதாரங்களுடன் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அறிவியலுக்கு புறம்பான மருத்துவ முறைகளை களைய வேண்டும்' என்றார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர், பேராசிரியர்கள் சுபலட்சுமி, ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி