உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடித்த பி.எல்.ஓ.,க்களுக்கு பாராட்டு

 எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடித்த பி.எல்.ஓ.,க்களுக்கு பாராட்டு

தேனி: மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை முடித்த பி.எல்.ஓ.,க்களை பாராட்டி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் சான்றிதழ் வழங்கினார். தமிழகத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நவ.,4ல் துவங்கியது. களப்பணியில் பி.எல்.ஓ.,க்களாக அங்கன்வாடி, சத்துணவு, நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கி, அதனை பூர்த்தி செய்தவர்களிடம் திரும்ப பெற்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் எஸ்.ஐ.ஆர்., பணியை முழுவதும் முடித்த 26 பி.எல்.ஓ.,க்களை பாராட்டி கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். தொகுதி வாரியாக ஆண்டிபட்டி நாகஜோதி, பொட்டித்தாய், செல்லபாப்பா, மகேஸ்வரி, கனிமொழி, வைரமுத்து, பார்த்தசாரதி, ராஜலட்சுமி, கயல்விழி, சுப்புலட்சுமி, போடி ராகவன், சாந்தி, மகேஸ்வரி, நாகராஜன், ராமுலம்மாள், உமாதேவி, நாகஜோதி, நதியா, கார்த்திகைதேவி, இந்திரா, நாகலட்சுமி, சவரியம்மாள், ரேணுகா, பெரியகுளம்(தனி) சித்ரா, கம்பம் தினகரன் ஆகிய பி.எல்.ஓ.,க்கள் எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை