ஊரக வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் ஆக. 23ல் மாநாடு
கம்பம் : ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆக. 23 ல் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊராட்சி செயலர்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், கணினி உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், சுகாதார ஊக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரை இணைத்து ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்புத்தியுள்ளனர். இந்த கூட்டமைப்பு சார்பில், 'ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்க நிலை என பணி காலத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். 18 ஆண்டுகளாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கணினி உதவியாளர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்யவும், 10 ஆண்டுகள் பணி முடித்த வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும் சம்பளம் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆக 23 ல் மாநாடு நடைபெறுகிறது என்று தேனி மாவட்ட கூட்டமைப்பு சார்பில் அறிவித்துள்ளனர்.