உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ஓட்டல் தொழிலாளி தற்கொலைதேனி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலுார் அருண்குமார் 23. இவர் தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்தார். விருதுநகர் மாவட்டம் சூரக்குண்டு திலகர்நகர் மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்தார். ஒராண்டிற்கு முன் மகாலட்சுமி கர்ப்பம் தரித்து, கரு கலைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பம் தரித்து உள்ளதாக அருண்குமார், அவரது தாய் லட்சுமியிடம் தெரிவித்தார். இந்நிலையில் மனைவி மகாலட்சுமியை அவரது அக்கா வீட்டில் விட்டு வந்தார். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என இருவரும் வேலைக்கு சென்ற பின் பெற்றுக் கொள்ளலாம் என மனைவி கூறியதாக, தாய் லட்சுமியிடம் அருண்குமார் தெரிவித்தார். இந்நிலையில் ஜூன் 20ல் பணி முடிந்து சென்ற அருண்குமார், மறுநாள் வேலைக்கு வரவில்லை. உடன் வேலை பார்க்கும் கணக்காளர் புருஷோத்தமன், பணியாளர் கவுதம் தேடிச் சென்றனர். வடபுதுப்பட்டி ரெட்டியார் தெருவில் அருண்குமார் குடியிருக்கும் வீட்டிற்கு எதிரே துாக்கு மாட்டி இறந்து கிடந்தார். பணியாளர்கள் இருவரும் ஓட்டல் மேலாளர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மகாலட்சுமி, லட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். அருண்குமாரின் உடல் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. லட்சுமி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் தாக்குதல்: கணவர் உட்பட ஐவர் மீது வழக்குதேனி: அல்லிநகரம் கக்கன்ஜி காலனி சுகந்திராதேவி 26. இவரது கணவர் ஜெகதீசன் 29. சுகந்திராதேவியின் 6 பவுன் நகையை ஜெகதீசன் அடகு வைத்தது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடந்தது. பின் ஜூன் 13ல் சுகந்திராதேவி, ஜெகதீசன், இவரது குடும்பத்தினர் முத்துக்கருப்பன், லட்சுமி, வீரப்பன், தினேஷ் ஒரே ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றனர். அப்போது சுகந்திராதேவியிடம் குழந்தையை பெற்ற கணவர் குடும்பத்தினர் தாக்கினர். காயமடைந்து பாதிக்கப்பட்ட மனைவி புகாரில் கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் ஐவர் மீது அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி மாயம்தேனி: அல்லிநகரம் அழகர்சாமி காலனி தங்கப்பாண்டி 42. இவரது 17 வயது மகள் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜூன் 18ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தங்கப்பாண்டி கடையில் விசாரித்த போது, சிறுமி வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். தெரிந்த இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் தங்கப்பாண்டி புகாரில், அல்லிநகரம் போலீசார் 17 வயது சிறுமியை தேடி வருகின்றனர்.மண் அள்ளும் இயந்திர ஆப்பரேட்டர் இறப்பில் மர்மம்தேனி: பெரியகுளம் சருத்துப்பட்டி பேங்ரோடு கிருஷ்ணமூர்த்தி 33. மண் அள்ளும் இயந்திர ஆப்பரேட்டராக உள்ளார். குடிக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இவரது தந்தை மணிகண்டன் ஜூன் 21 அன்று மகனை கண்டித்தார். அப்போது இரு நாட்களில் கேரளாவிற்கு வேலைக்கு செல்லவதாக கிருஷ்ணமூர்த்தி கூறினார். ஆனால் மறுநாள் இரவு வீட்டிற்கு செல்லாமல் இருந்தார். ஜூன் 23 காலை வடபுதுப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே படுத்திருந்த கிருஷ்ணமூர்த்தி பின்தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். தந்தை புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் முதியவர் காயம்தேனி: கோட்டூர் மூர்த்தி 67. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மகள் தோட்டத்திற்கு இவரது மனைவியுடன் டூவீலரில் புறப்பட்டார். கோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே நின்றிருந்த போது, கோட்டூர் ரைஸ்மில் தெரு விஜய் ஓட்டி வந்த டூவீலர், மூர்த்தி மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்த மூர்த்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லுாரி மாணவி மாயம்ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் நேச நாயனார் கோயில் தெரு பால்ராஜ் 49. இவரது மகள் மகாலட்சுமி 19. இவர் பெரியகுளம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன் மகாலட்சுமி கடைக்கு சென்று விட்டு வருவதாக வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அலைபேசி தொடர்பும் இல்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை புகாரில், ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மது பதுக்கியவர் கைதுபோடி: அருகே குலாளர்பாளையம் வாமணன் தெரு ஜெயராணி 52. இவர் சட்டவிரோத விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி டவுன் போலீசார் ஜெயராணியை கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.பெண் அரசு ஊழியர் மாயம்ஆண்டிபட்டி: நடுகோட்டை கிழக்குத்தெரு காலனி வேல்த்தாய் 31. ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தின் உதவி வருவாய் ஆய்வாளர். நான்கு நாட்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு வீட்டிலிருந்து சென்றவர், மாலையில் வேலை முடித்த பின் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை சுப்புராஜ் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.வயிற்று வலியால் தற்கொலைஆண்டிபட்டி: சித்தார்பட்டி ஐயப்பன் 42. இவரது மனைவி ஜெயலட்சுமி 39. சத்துணவு உதவியாளர். இரு பிள்ளைகள் உள்ளனர். விவசாய தொழில் செய்து வந்த ஐயப்பன் குடிப்பழக்கத்தால் வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகாத நிலையில் மனம் வெறுத்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தகர செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மனைவி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவன் காயம்: இருவர் மீது வழக்குபோடி: ஓம் சக்தி கோயில் தெரு ரஞ்சித்குமாரின் 8 வயது மகன். இவர் நேற்று கடைக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்றார். போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்த செந்தில்குமாரின் 46, 17 வயது மகன் கவன குறைவாக டூவீலரை ஓட்டி வந்து, நடந்து சென்ற 8 வயது சிறுவர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் கீழே விழுந்ததில் சிறுவருக்கு காயம் ஏற்பட்டது. டூவீலர் ஓட்டிய 17 வயது சிறுவன் மீதும், டூவீலரின் உரிமையாளர் செந்தில்குமார் மீதும் வழக்குப் பதிந்து போடி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ