உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கொலை மிரட்டல்: வாலிபர் கைது

போடி :' போடி புதூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவன் 25. டிரைவர். இவரிடம் போடி பூங்கா நகரை சேர்ந்த சையது உசேன் 26. என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாங்காய் மார்க்கெட்டில் நின்று இருந்த சிவனிடம், சையது உசேன் தகராறு செய்ததோடு, கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து கையில் குத்தி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போடி டவுன் போலீசார் சையது உசேனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை