மேலும் செய்திகள்
புலியிடம் சிக்கி பசு பலி
6 hour(s) ago
மின் சிக்கன வார விழா
6 hour(s) ago
அண்ணன் மாயம் தம்பி புகார்
6 hour(s) ago
செந்நாய்கள் நடமாட்டம் அதிகரிப்பு
6 hour(s) ago
மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள், குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடும் குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள், போதை பொருள் கடத்தல், சட்டவிரோத விற்பனை செய்யும் நபர்கள், குற்றப்பின்னணி உள்ளவர்கள் பட்டியல் ஸ்டேஷன் குற்ற வழக்கு வரலாற்று பதிவேடுகளில் பதிவு செய்து அவர்களை கண்காணிப்பது வழக்கம். மாவட்டத்தில் 5 சப்டிவிஷன் பகுதிகளில் தேனி 94, போடியில் 166, உத்தமபாளையத்தில் 125, ஆண்டிபட்டியில் 69, பெரியகுளத்தில் 85 என மொத்தம் 539 பேரை பிரச்னைக்கு உரியவர்களாக எஸ்.பி., உத்தரவில் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதில் பிரச்னைக்குரிய 64 பேரிடம் பினை உறுதி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மற்றவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.தற்போது லோக்சபா தேர்தலையொட்டி இப்பதிவேடுகளில் உள்ளவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்து அனைவரிடத்திலும் பினை உறுதிமொழி படிவம் பெற்று அதன் விபரங்களை தேர்தல் கமிஷனிடமும் வழங்கும் பணியினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.போலீசார் பராமரித்து வரும் பிரச்னைக்குரியவர்களின் பட்டியலில் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளில் பொறுப்பில் உள்ள பல நிர்வாகிகளும், முக்கிய பிரமுகர்களும் இதில் உள்ளனர். இவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் இவர்களிடம் சென்று பினை உறுதிமொழி படிவம் பெறுவதில் போலீசார் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஆனாலும் இவர்களை தொடர் கண்காணித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், இதுவரை 316 மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பினை உறுதி மொழி படிவம் பெற்றுள்ளோம். இன்னும் பட்டியலில் பிரச்னைக்கு உரியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல்வாதிகளும் உள்ளனர். இதனால் இவர்களிடம் பினை உறுதி மொழி பத்திரம் பெற முடியாமல் போலீசார் உள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago