உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

 டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

தேனி: தேனி பழனிசெட்டிபட்டி தனியார் ஓட்டலில் வினோரா பவுண்டேஷன், சென்னை இ செர்ச் நிறுவனம் சார்பில், நடந்த உலகளாவிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை வாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது. சமூக வலைதளங்கள் மூலம் எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்துடன் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி என்ற தலைப்பில் பிரவீன் பயிற்சி வழங்கினார். டிஜிட்டல் துறை வளர்ச்சி, ப்ரீ லான்சிங் வாய்ப்புகள், சர்வதேச நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை பெறுவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பவுண்டேஷன் பயிற்சியாளர் காளீஸ்வரி சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் உருவாக்குவது, லீட்ஸ் பெறுவது பற்றி பேசினார். கருத்தரங்கில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு வினோரா பவுண்டேஷன் இயக்குநர் ராஜன் சான்றிதழ்கள் வழங்கினார். தேனி மாவட்டத்தை சேர்ந்த யுடியூபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் வினோரா பவுண்டேஷன் மேலாளர் குமார், ஷாலினி, மாரிஸ்கிரிதரன், ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை