| ADDED : ஜன 27, 2024 04:38 AM
தேனி : தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தை 6 உறுப்பினர்கள் புறக்கணித்தனர். தலைவர் பாண்டியம்மாள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விவசாயி வழங்கிய புகாரை ஏ. பி.டி.ஓ., உரிய அதிகாரியிடம் மனு வழங்க அறிவுறுத்தினார்.இவ்வூராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் ஏ.பி.டி.ஓ., சுபாராணி, தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நடந்தது. செயலர் பாலசந்தர் முன்னிலை வகித்தார். கிராம சபை கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஊராட்சியில் நடைபெறாத பணிகள் குறித்தும் 12 மனுக்கள் வழங்கப்பட்டன. ஊராட்சியில் வசிக்கும் விவசாயி அதிகாரி என்பவர் ,தலைவர் பாண்டியம்மாள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என புகார் அளிக்க வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலைவி பாண்டியம்மாள், ஏ.பி.டி.ஓ.,விடம் தனிநபர் புகார் மனுக்களை கிராம சபை கூட்டத்தில் வழங்கக்கூடாது. அதை நீங்கள் பெறவும் கூடாது என வாதிட்டார். இதனால் ஏ.பி.டி.ஓ., ஆட்சேபகரமான மனு என்பதால் பெற இயலாது. உரிய அதிகாரியிடம் வழங்கலாம்.' என கைப்பட எழுதி, மனு வழங்கியவரிடம் திருப்பி கொடுத்துவிட்டார். அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ.,க்கள் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.