உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளி சாரல் விழா இரண்டாம் நாளில் நாய்கள் கண்காட்சி

சுருளி சாரல் விழா இரண்டாம் நாளில் நாய்கள் கண்காட்சி

கம்பம்: சுருளி சாரல் விழாவின் இரண்டாம் நாளான நேற்று கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நாய்கள் கண்காட்சி நடந்தது.சுருளி அருவியில் சாரல் விழா செப்.28 ல் துவங்கி அக்.2 வரை 5 நாட்கள் நடக்க உள்ளது. சாரல் விழாவை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று காலை துவங்கியது. ஜவஹர் சிறுவர் மன்றத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.கால்நடை பராமரிப்பத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடந்தது. கோம்பை, சிப்பி பாறை, ராஜபாளையம் போன்ற உள்நாடு இனங்களும், ஜெர்மர் ஷெப்பர்டு, டாபர்மேன் போன்ற பல்வேறு வெளிநாட்டு நாய்கள் என 60 வகையான இனங்கள் பங்கு பெற்றன. இணை இயக்குனர் கோயில்ராஜா தலைமையிலான டாக்டர்கள் குழு ரேபிஸ் தடுப்பூசிகளை நாய்களுக்கு செலுத்தினர். பங்கு பெற்ற நாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பட விளக்கம் : சுருளி அருவி சாரல் விழாவின் இரண்டாம் நாளான நேற்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.படம் மெயில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ