உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி

100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி

போடி: போடி வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என போடி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராஜமுருகன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : போடி வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் காய்கறி, தென்னை, வாழை, மா, பழ வகைகள் உள்ளிட்ட விவசாயம் செய்திட பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான பைப், கேட் வால்வு, வடிகட்டும், உரம் செலுத்தும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான உபகரணங்கள் பெற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஐந்து ஏக்கருக்குள் நிலம் இருக்க வேண்டும். அதற்கான சான்று, ஆதார், சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, பாங்க் பாஸ்புக் நகல். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் உபகரணங்கள் வழங்கப் படுகின்றன. உரிய சான்றுகளுடன் போடி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் வழங்கி பாசனத்திற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை