மேலும் செய்திகள்
நாளை (அக்.31ல்) மின்தடை
4 hour(s) ago
126 டன் விதைகள் கையிருப்பு
4 hour(s) ago
மதுபாரை மூடக்கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
ஊராட்சி பணியாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
போடி: போடி அரசு மருத்துவமனையில் நர்சிங் உதவியாளர்கள், மருந்து கட்டுபவர், கண் பரிசோதகர் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1800 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இதில் 100 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். போடி மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்கள் கேரளாவை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு போதிய டாக்டர்கள் இருந்தும் கண் பரிசோதகர், குடும்ப நலப் பிரிவில் நர்சிங் உதவியாளர்கள், மருந்து கட்டுபவர், மருத்துவ பணியாளர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் இல்லை. கண் பரிசோதகர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதால் கண் பரிசோதனை செய்ய முடியாமல் தனியாரிடம் செல்கின்றனர். இங்கு மின் வயரிங் செய்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அலுமினிய வயரிங் என்பதால் அடிக்கடி மின் கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. மின் தடையால் சில நேரம் மகப்பேறு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகிறது. ஜெனரேட்டர் இருந்தும் வயரிங் பழுதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்க எலக்ட்ரீசியன் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் உரிய நேரத்தில் மகப்பேறு சிகிச்சை அளிக்க முடியாமல் உயிர் பலியாகும் அபாய நிலை ஏற்படுகிறது. அந்த அவல நிலையால் கர்ப்பிணிகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதார சீர்கேடு மோசமாக உள்ளது. பிளம்பர்கள் இல்லாததால் குடிநீர் குழாய், போர்வெல் குழாய் பழுதை சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. முக்கிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நோயாளிகள் நலன் கருதி கண் பரிசோதகர், நர்சிங் உதவியாளர், மருந்து கட்டுபவர், எலக்ட்ரீசியன், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப நலப் பணிகள் இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago