உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வியாபாரியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மூதாட்டிக்கு ஆயுள்

 வியாபாரியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மூதாட்டிக்கு ஆயுள்

தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே குளிர்பான வியாபாரி மாரிச்செல்வத்தை 54, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி பெருமாயிக்கு 70, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேவாரம் ஓவுலாபுரம் சசிகலா. இவர் தேவாரம் பேரூராட்சி தற்காலிக மஸ்துார் பணியாளர். இவரது கணவர் குளிர்பான வியாபாரி மாரிச்செல்வம். சசிகலா வீட்டிற்கு கிழக்கு புறத்தில் மூதாட்டி பெருமாயி வசித்தார். இருவர் வீட்டின் சுவர்களும் இணைப்பாக இருந்தது. சசிகலா வீட்டின் செப்டிங் டேங்க் தண்ணீர், பெருமாயி வீட்டு சுவரில் பட்டு துர்நாற்றம் வீசியது. 2 ஆண்டுகளாக இருவீட்டாரும்சண்டையிட்டு முன்விரோதம் இருந்தது. 2024 ஆக.8ல் மாலை மாரிச்செல்வம் தேவாரம் போடி மெயின் ரோட்டில் உள்ள பெருமாள்பட்டியில் உள்ள வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது பெருமாயி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து மாரிச்செல்வத்தை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 3 நாட்களுக்கு பின் மாரிச்செல்வம் உயிரிழந்தார். தேவாரம் போலீசார் பெருமாயியை கைது செய்தனர். இந்த வழக்குதேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார். பெருமாயிக்குஆயுள் தண்டனை ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை