| ADDED : மார் 06, 2024 05:37 AM
தேனி : தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆவின் உள்ளிட்ட கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காலவதி பொருட்களை உணவுப்பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆவின் பாலக விற்பனைக்கு தடை விதித்தனர்.கலெக்டர் அலுவல வளாகத்தில் ஆவின் பாலகம், மகளிர் சுயஉதவிக்குழுவினரின் சிறுதானிய உணவகங்கள், காதிகிராப்ட், சர்வோதயா கடைகள் செயல்படுகின்றனர். இங்குள்ள ஆவின் பாலகத்தில் பால் பொருட்கள் மட்டுமின்றி சாப்பாடு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் நேற்று உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில் ஆவின் பாலகத்தில் சுகாதாரம் இன்றி உணவு தயாரித்ததும், கெட்டுப்போன பால் பொருட்கள் 3.6 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த இனிப்பு, கார வகைகள் 5 கிலோ, இட்லி பொடி, பனங்கருப்பட்டி, உறுகாய் உள்ளிட்டவை 7.5 கிலோ கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்தனர். நான்கு கடைகளுக்கும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆவின் பாலகத்தில் விற்பனைக்கு தடை விதித்தனர்.ஆவின் மேலாளர் வாணீஸ்வரி கூறுகையில், 'கலெக்டர் அலுவலக ஆவின் பாலகத்தில் கெட்டுப்போன பொருட்கள் வைத்திருந்தது பற்றி விளக்கம் கேட்டு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்',என்றார்.உணவுப்பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், ஆவின் பாலகத்தில் சுகாதாரம் பின்பற்றாததால் விற்பனைக்கு தடை விதித்தோம். ஒரு நாளுக்கு பின் விற்பனை துவங்க அறிவுறுத்தினோம்' என்றனர்.