உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 வரை தேதி நீட்டிப்பு

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 வரை தேதி நீட்டிப்பு

தேனி: விவசாயிகள் நெல் பயிருக்கு நவ.,30 வரை காப்பீடு காப்பீடு செய்யலாம். தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், தேனி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ராபி சிறப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.,15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்நிலையில் கடைசி தேதி நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர். மேலும் கூறியதாவது, வெள்ளம், அதிக மழை உள்ளிட்ட ஏதேனும் எதிர்பாரத பயிர் இழப்புகளில் இருந்து பாதுகாக்க காப்பீடு செய்வது அவசியமாகும். ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.35,600 ஆகும். இதற்கு பிரிமியம் தொகையாக ரூ.534 செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீடு பதிவு செய்யலாம். என்றனர். காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா துவங்கி வைத்தார். வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி