உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

போடி : போடி அருகே சங்கராபுரம் மேற்கு தெருவில் வசிப்பவர் முத்துராஜ் 49., விவசாயி. இவருக்கு கோணாபட்டி விலக்கில் தோட்டம் உள்ளது. தோட்ட கிணற்றின் அடியில் இருந்த பழுதடைந்த மின் மோட்டாரை முத்துராஜ் மற்றும் இருவர் சேர்ந்து கயிறு மூலம் மேலே எடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எதிர்பாராத விதமாக முத்துராஜ் தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே இறந்தார். போடி தீயணைப்பு படையினர் இறந்த முத்துராஜின் உடலை மீட்டினர். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை