இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க களப்பணி
கம்பம் : இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறையினர் களப்பணியாற்ற தோட்டக்கலைத்துறை ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது.காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் சாகுபடியில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிமருந்துகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, இயற்கை வேளாண்மையை விவசாயிகள் பின்பற்ற தோட்டக்கலைத் துறையினர் தோட்டம் தோட்டமாக சென்று களப்பணியாற்ற தோட்டக்கலைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஏற்கெனவே இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பிற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. விவசாயிகளிடம் ரசாயண உரங்கள்,பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க களப்பணியே தீர்வாகும். எனவே தோட்டக்கலைத்துறையினர் களப்பணியாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.