உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின் கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு அபராதம்... உயர்வு:ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் செலுத்த அறிவுறுத்தல்

மின் கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு அபராதம்... உயர்வு:ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் செலுத்த அறிவுறுத்தல்

தேனி:மின் மீட்டர் ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் அதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் அபராத கட்டணம் ரூ.65ல் இருந்து ரூ.135 ஆகவும், ரூ.250 ல் ரூ.330 ஆக அபாரத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர் மின் கட்டணத்தை நேரடியாகவோ, ஆன் லைன் மூலமாகவோ உரிய நாளில் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தேனி மின் பகிர்மான கோட்டத்தில் குடியிருப்புக்களுக்கான பயன்பாட்டு திட்டத்தில் 2.82 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் சாதாரண மக்களின் தனி குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் தொழிலாளிகள், முதியோர் காப்பகங்கள் அடங்கும். கடந்த ஜூன் 30ல் திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டண பட்டியல்படி நுகர்வோர் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 60 நாட்களுக்கு 0 முதல் 100 யூனிட் இலவசம். அதன்பின் 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ஒன்றுக்கு ரூ.4.95ம், 201 முதல் 400 யூனிட் வரை ரூ.4.95ம், 401 முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.6.65 கட்டணமாக செலுத்த வேண்டும். 501 முதல் 600 யூனிட் வரை ரூ.8.80ம், 601 முதல் 800 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.9.95ம், 801 முதல் 1000 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.11.05ம், ஆயிரம் யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.12.15ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபராத கட்டணம் உயர்வு

மின்கட்டணம் நுகர்வோர் வீடுகளில் ரீடிங் எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி விட வேண்டும் என்பது விதி. உரிய நாட்களில் செலுத்தாத மின்நுகர்வோர்கள் 20 நாட்களுக்கு பின் வீட்டின் மீட்டரில் உள்ள பியூஸ் கட்டை எடுத்து இணைப்பு துண்டிக்கப்படும். வீட்டின் உரிமையாளர் இல்லை எனில் மின்கம்பத்தில் இணைப்பை துண்டித்து விடுவார். இதற்கான அபராத கட்டணம் இதற்கு முன் ரூ.65 (மீட்டரில் பியூஸ் கட்டை அகற்றம்), மின்கம்பத்தில் இணைப்பு தற்காலிக துண்டிப்பு ரூ.250 என இருந்தது. தற்போது வீடுகளில் பியூஸ் கட்டை அகற்றியிருந்தால் நிலுவையில் உள்ள மின்கட்டணத்துடன் ரூ.135ம், மின்கம்பத்தில் இணைப்பு துண்டித்திருந்தால் ரூ.330ம், அண்டர் கிரவுண்ட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் துண்டித்தால் ரூ.550 கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையுடன் காலதாமதம் ஏற்பட்ட நாட்களுக்கு 1.25 சதவீத வட்டி செலுத்த வேண்டும். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‛20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்திவிட்டால் துண்டிப்பு பின், மீண்டும் இணைப்பு பெற மின்வாரியத்திற்கு அழைவது குறையும். இதனை நுகர்வோர் உணர்ந்து செயல்பட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை