உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

மூணாறு, : மூணாறில் ஹைரேஞ்ச் வர்த்தக சங்கம் இளைஞரணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் சார்பில் 34 ம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மூணாறு வர்த்தக சங்க தலைவர் பாபுலால் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. ராஜா துவக்கி வைத்தார். தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன், வர்த்தக சங்க மாவட்ட தலைவர் சன்னி பைம்பிள்ளில், மூணாறு பகுதி பொது செயலாளர் கணேசன், செயலாளர் ராமராஜ், பொருளாளர் மனோகரன், தேவிகுளம் வட்டார தலைவர் சாஜூவர்க்கீஸ், இளைஞரணி மாவட்ட தலைவர் சலீம், மூணாறு பகுதி தலைவர் அருண்லால், பொது செயலாளர் ரியாஸ், பொருளாளர் மகாராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் 900 பேர் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 177 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி