உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புளிய மரங்களில் காய்ப்பு அதிகரிப்பு

புளிய மரங்களில் காய்ப்பு அதிகரிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் இருந்து வைகை அணை, ஏத்தக்கோயில், தெப்பம்பட்டி, புள்ளிமான்கோம்பை செல்லும் ரோடுகளில் நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. தனியாருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களிலும் உள்ளன. புளிய மரங்களில் பழங்கள் பறிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் ஏலம் விடப்படும். கடந்த சில மாதங்களில் ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து பெய்த மழையால் புளிய மரங்களில் இந்த ஆண்டு காய்கள் அதிகம் எடுத்துள்ளது. வியாபாரிகள் கூறியதாவது: மரங்களில் இருந்து புளியம்பழங்கள் பறிக்க இன்னும் சில வாரங்கள் ஆகும். சில்லறை விலையில் தற்போது புளி கிலோ ரூ.140 வரை உள்ளது. வரத்து அதிகரித்தால் புளி விலை குறையும் வாய்ப்புள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை