உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சோத்துப்பாறை அணையில் மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சோத்துப்பாறை அணையில் மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்; சோத்துப்பாறை அணையில் 22 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக தொடர்ந்து 69 நாட்களாக அணை நீர்மட்டம் உயர்ந்து, மறுகால் பாய்வதால் பாசன விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி, சோத்துப்பாறை அணைப் பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28 அடி. 100 மில்லியன் கன அடி கொள்ளளவு.கடந்த அக்., 24ல் அணை நீர்மட்டம் முழுவதுமாக உயர்ந்து மறுகால் பாய்ந்தது. நவ., 1ல் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பழைய ஆயக்கட்டு 1825 ஏக்கர், புதிய ஆயக்கட்டு 1040 ஏக்கர் என மொத்தம் 2865 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. நேற்று அணையின் உயரம் 126.28 அடி. அணைக்கு வினாடிக்கு வரும் 45.96 கன அடியும், அப்படியே மறுகால் பாய்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி:

சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு 2001 ல் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. 22 ஆண்டுகளில் முதன் முதலாக நேற்று வரை 69 நாட்களாக மறுகால் பாய்வதால் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் இதனால் 10 கி.மீ., தொலைவில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இறவைப் பாசன சாகுபடியும் துவங்கியுள்ளதால், விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ