உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் இறந்து கிடந்த கணவன், மனைவி

வீட்டில் இறந்து கிடந்த கணவன், மனைவி

ஆண்டிபட்டி,: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனுாரை சேர்ந்தவர் கருப்பையா 61. கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பார்வதி 58. இவர்களது மகன் மரக்காமலை திருமணம் முடிந்து கருப்பையா வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார். இரு ஆண்டுகளுக்கு முன் பார்வதி வீட்டில் வழுக்கி விழுந்ததில் இடுப்பில் காயமடைந்து உடல்நிலை பாதித்து சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மரக்காமலை தந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள படுக்கையறையில் கருப்பையா, பார்வதி விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை