உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் திறப்பு நீரின் அளவு அதிகரிப்பு

வைகை அணையில் திறப்பு நீரின் அளவு அதிகரிப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடியிலிருந்து 3082 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன் தினம் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று காலை 11:00 மணிக்கு வினாடிக்கு 82 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வைகை அணை நீர்மட்டம் 64.47 அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி. அணையில் நீர் வெளியேற்ற அளவீட்டின் சராசரியை ஈடு செய்வதற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ