உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலை வாகனங்கள் அதிகரிப்பு; வேகம் குறைக்க அறிவுறுத்தவேண்டும்

சபரிமலை வாகனங்கள் அதிகரிப்பு; வேகம் குறைக்க அறிவுறுத்தவேண்டும்

கம்பம்; சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வேகத்தை குறைத்து செல்ல போலீசார் அறிவுறுத்த வேண்டும்.தேனி -குமுளி ரோட்டில் சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் அதிகரித்துள்ளது. ரோட்டில் இரவு பகல் பாராமல் விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் அடுத்தடுத்து செல்கிறது. வெளி மாநிலங்கள் இருந்து வருபவர்கள் அதிவேகத்தில் வாகனங்களை செலுத்துகின்றனர். ஒரு வழிப்பாதை இன்னமும் அமல்படுத்தவில்லை. சில நாட்களில் வாகன விபத்துக்கள் நடக்க ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நடத்த விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.எனவே போலீசார் ஆங்காங்கே சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி வேகத்தை குறைத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். தனியார் பஸ் டிரைவர்களையும் எச்சரித்து அனுப்ப வேண்டும். அரசு போக்குவரத்து கழக டிரைவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க வேண்டும். டிரைவர்கள் மன அழுத்தத்துடன் வாகனங்களை செலுத்தாமல் இருக்க அறிவுரை கூறி விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள போலீசார் முன்வர வேண்டும். வட்டார போக்குவரத்து துறையும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை