உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பனிப்பொழிவு அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்

 பனிப்பொழிவு அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்

போடி: போடி - மூணாறு, பூப்பாறை செல்லும் மெயின் ரோட்டில் பனிப்பொழிவு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப் படும் மூணாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்து உள்ளது போடிமெட்டு. இந்த மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் உள்ளது. குரங்கணி, டாப்ஸ்டேஷன், கொழுக்கு மலை, கேரளா பகுதியான பூப்பாறை, நெடுங்கண்டம், புளியமலை உள்ளிட்ட பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. மாலை 5: 00 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 10:00 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை உள்ளது. பலர் முகப்பு லைட் போடாமல் ஓட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்து இயற்கை அழகை ரசிப்பதோடு, அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்து செல் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை