உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயோமெடிக்கல் வேஸ்ட் பிளான்ட் அமைக்க வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை

பயோமெடிக்கல் வேஸ்ட் பிளான்ட் அமைக்க வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை

கம்பம்: ''மருத்துவக் கழிவுகளை கையாளும் பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட்டை தமிழக அரசே நடத்தவும், மாவட்டத்திற்கு ஒன்று வீதம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, இந்திய மருத்துவ சங்கம் (I.M.A.,) கம்பம் முல்லைப் பெரியாறு கிளை, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு, தனியார் என, அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகள் சேகரமாகும். இதுதவிர மனித உடல், விலங்குகளின் உடல், நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் தொழில் நுட்ப கழிவுகள் என வகைப்படுத்தப்பட்டு 48 மணி நேரத்தில் அதன் தன்மைக்கு ஏற்ப அழிக்கப்பட வேண்டும் என, 2016 விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் விருதுநகர் காரியாபட்டியில் இயங்கும் பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட் சார்பில் சேகரிக்கப்படுகிறது. அங்கு இன்சினிரேசன் (incineration) , ஆட்டோகிளாவிங், கெமிக்கல் டிஸ்இன்பெக்சன் என பல முறைகளில் அழிக்கின்றனர். இருப்பிணும் கிராமங்களில் போலி டாக்டர்கள், மருத்துவக் கழிவுகளை சர்வ சாதாரணமாக குப்பையில் வீசிச் செல்வதால் தொற்று நோய் ஏற்படும் விளைவுகள் அபாயகரமாக ஏற்படுகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பின்பும் கேரளாவில் இருந்து கம்பம் பகுதி மற்றும் தமிழகத்தின் எல்லையோரப் பகுதியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்லும் அவலம் நடந்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு பயோமெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட் அமைத்து, அரசு நிர்வகிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் (I.M.A.,) கம்பம் முல்லைப்பெரியாறு கிளையின் தலைவர் டாக்டர் சூரியகுமார் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் பிளாண்ட் அமைக்க நீண்ட காலமாக ஐ.எம்.ஏ., முயற்சி செய்தது. ஆனால் பிளாண்ட் அமைக்கவே பல கோடிகள் தேவையாக இருந்தது. உரிமம் பெறுவதிலும் சிரமங்கள் இருந்தன. குறிப்பாக பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். கேரளாவில் ஐ.எம்.ஏ., மாநில அமைப்பு 2 பிளாண்ட்டுகளை நிறுவி செயல்பாட்டில் உள்ளது. அதுபோல் தமிழக ஐ.எம்.ஏ.,வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் தமிழக அரசு அனைத்து மாவட்டத்திற்கும் தலா ஒரு பிளாண்ட் அமைத்து, நிர்வகிக்க வேண்டும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி