உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரவங்கலாறு - சுருளி அருவி இடையே ரோப்கார் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

இரவங்கலாறு - சுருளி அருவி இடையே ரோப்கார் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

கம்பம் : இரவங்கலாறு - சுருளி அருவி இடையே ரோப்கார் வசதி ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் சுருளி அருவி பிரதான சுற்றுலாதலமாக உள்ளது. இங்குள்ள அருவியில் குளிக்க தமிழகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.வருபவர்கள் ஹைவேவிஸ், மணலாறு இரவங்கலாறு, தூவானம் , மகாராசா மெட்டு போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கும் செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு சென்று விட்டு சுருளி அருவிக்கு வர வேண்டும் என்றால் குறைந்தது 80 கி.மீ. தூரம் பயணம் செய்து வர வேண்டும். இதை தவிர்க்க இரவங்கலாறிலிருந்து சுருளி அருவிக்கு ரோப்கார் அமைத்தால் 30 நிமிடங்களில் சுருளி அருவிக்கு சென்று விடலாம்.ஏற்கெனவே 15 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து சர்வே நடந்தது. வனத்துறையினரின் ஆட்சேபனையால் நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது பழநி- கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைக்க ஆய்வுகள் துவங்கி உள்ள நிலையில் இரவங்கலாறு- சுருளி அருவி ரோப்கார் அமைக்கும் ஆய்வு பணியையும் மேற்கொண்டால் சுற்றுலா மேம்படும். வனத்துறையே சூழல் சுற்றுலா திட்டத்தில் இந்த ரோப்கார் திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை