ஓய்வூதிய பரிந்துரையை களஞ்சியம் செயலியில் அனுப்ப அறிவுறுத்தல்
தேனி : கலெக்டர் அலுவலகத்தில் கருவூலத்துறை சார்பில் அரசுத்துறை மாவட்ட அலுலர்களுக்கான கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலம் , வரும் நாட்களில் ஓய்வூதிய முன்மொழிவுகளை மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்திற்கு களஞ்சியம் 2.0 தளத்தின் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டியவற்றை டிச.,20க்குள் களஞ்சியம் செயலியில் அனுப்ப வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வருமான வரி தொடர்பான கோப்புகளை சரி செய்து கருவூல அலுவலரிடம் அளிக்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதிய முன்மொழிவுகளை களஞ்சியம் செயலியில் அனுப்ப வேண்டும். விடுபட்ட அல்லது தவறுதலாக உள்ள மின்கட்டண இணைப்புகளை சரிசெய்து பதிவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, சமூக நல அலுவலர் சியாமளா தேவி, சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா,கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குநர் கோயில்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.