உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா சாகுபடிக்கு காப்பீட்டு திட்டம் ஜன., 7 வரை நீட்டிப்பு

மா சாகுபடிக்கு காப்பீட்டு திட்டம் ஜன., 7 வரை நீட்டிப்பு

பெரியகுளம்: மாவட்டத்தில் மா சாகுபடிக்கு காப்பீட்டு திட்டம் ஜன.,7 வரை நீடிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக மா விவசாயம் பாதித்தது. தேனி மாவட்ட விவசாயிகள் மா சாகுபடிக்கு காப்பீட்டு திட்டம் கொண்டு வரவேண்டும் என கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை வைத்தனர்.இதனடிப்படையில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் முதன் முதலாக மா சாகுபடிக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற்றது.ஏக்கருக்கு ரூ.364.37 வீதம் காப்பீட்டு கட்டணம், 2025 ஜன., முதல் ஜூன் 25 வரை (6 மாதம்) ஆகும்.ஒரு ஏக்கர் விளைச்சல் பாதிப்பிற்கு ரூ.6072 வழங்கப்படும் என டிச.28 கடைசி நாளாக அறிவித்தது. இதில் பெரியகுளம் 50 ஏக்கர், போடி 30 ஏக்கர், ஆண்டிபட்டி 2 ஏக்கர் என 50 விவசாயிகள் நடப்பு சீசனுக்கு காப்பீட்டு செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் வேண்டுகோளுக்கு இணங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஜன.7 வரை நீட்டிப்பு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ