உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண்ணெண்ணெய் முறைகேடு விற்பனையாளர் சஸ்பெண்ட்

மண்ணெண்ணெய் முறைகேடு விற்பனையாளர் சஸ்பெண்ட்

தேனி : தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் கூடலுார் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரலில் மண்ணெண்ணெய் வினியோகம் தொடர்பாக கம்பம் பொது வினியோக திட்ட சார்பதிவாளர் இமயவர்மன் ஆய்வு செய்தார். அதில் பில் அளவிற்கு குறைவாக வழங்குதல், கைரேகை பதிவு இல்லாமல் வழங்கல் என 113 லிட்டர் முறைகேடாக வழங்கியது கண்டறியப்பட்டது. அதற்கு ரூ. 5650 அபராதமாக விதிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்த விற்பனையாளர் சுப்பிரமணியனை செப்.,17 முதல் சஸ்பெண்ட் செய்து சங்க துணைப்பதிவாளர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ