உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலசுப்பிரமணியர் கோயிலில் அர்ச்சகர்கள் பற்றாக்குறை பக்தர்கள் அவதி

பாலசுப்பிரமணியர் கோயிலில் அர்ச்சகர்கள் பற்றாக்குறை பக்தர்கள் அவதி

பெரியகுளம்: ஆங்கில புத்தாண்டு நாளில் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் அர்ச்சகர்கள் பற்றாக்குறையால் பக்தர்கள் அவதியடைந்தனர்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் இரு அர்ச்சகர்கள் உள்ளனர்.ஆங்கிலபுத்தாண்டு நாளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜேந்திரசோழீஸ்வர் சன்னதியில் பக்தர்கள் சாமிக்கு அணிவிக்க பலரும் பூ மாலைகளுடன் வந்தனர். இம்மாலைகளை மூலவர், உற்ஸவர்களுக்கு அணிவிக்காமல் மூலையில் வைத்து விட்டு, விபூதி வழங்கி பக்தர்களை அனுப்புவதையே கவனம் செலுத்தினர். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அறம் வளர்த்த நாயகி சன்னதியின் உட்புற கதவு மூடியிருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் பலரும் திரும்பினர். விசேஷ நாட்களில் கோயிலில் கூடுதல் அர்ச்சகர்களை நியமித்து அபிஷேகம், தீபாராதனை நடத்தினால் பக்தர்கள் திருப்தி அடைவார்கள்.

செயல் அலுவலர் இல்லை

ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோயில் உட்பட 5 கோயில்களுக்கு செயல் அலுவலராக ராமதிலகம் பணியாற்றினார். இவர் ஜூலையில் விருதுநகருக்கு மாறுதலில் சென்றார். ஆண்டிபட்டி செயல் அலுவலர் ஹரீஸ்குமார் கூடுதல் பொறுப்பில் உள்ளார். பெரியகுளம் கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பது இல்லை. இதனால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் கூறுகையில், 'பெரியகுளம் கோயில்களுக்கு வாரம் ஒரு முறை வருகிறேன். மாதத்தில் எத்தனை நாட்கள் வருகிறேன்.' என உங்களிடம் கூற முடியாது' என்றார். பெரியகுளத்திற்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கவும், விசேஷ நாட்களில் கோயிலில் கூடுதல் அர்ச்சகர்களை நியமிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை