மேலும் செய்திகள்
நீதிபதியுடன் தகராறு வழக்கறிஞர்கள் மீது தடியடி
29-Oct-2024
தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டன.லட்சுமிபுரத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன் முப்பெறும் குற்றவியல் சட்டங்களைதிரும்பபெறக் கோரியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரியும் தமிழ்நாடு -புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு முடிவின்படி தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில்,நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனிவழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் பாஸ்கரன், இணைச் செயலாளர் லோகநாதன்,துணைச் செயலாளர் மகாலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.* தேனி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில், ' வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் இளங்குமரன்,துணைத் தலைவர் அழகர்சாமி, இணைச் செயலாளர் மல்லீஸ்வரன், துணைச் செயலாளர் வடிவேலன்,செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டன.
29-Oct-2024