உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.51.02 கோடி கடனுதவி

சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.51.02 கோடி கடனுதவி

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் நடந்த விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 648 பேருக்கு ரூ.51.02 கோடி கடனுதவியை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். மேலும் இரு மாற்றுத்திறனாளி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 3.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் வழங்கப்பட்டன. கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டி வங்கி கிளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனிப், மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் சந்திசேகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி